பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான்-
2012 இல் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசில் முதலாம் கட்ட கொடுப்பனவு பொத்துவில் பிரதேசத்தில் புதிதாக திறக்கப்பட்ட உப வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இன்று காலை 9.30 மணியளவில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் பொத்துவில் உப வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் ஏ.அப்துல் அஸீஸ் அவர்கள் மாணவர்களுக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.இந்நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் என்.அப்துல் வஹாப் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
பொத்துவில் பிரதேசத்தில் புதிதாக திறக்கப்பட்ட உப வலயக்கல்வி அலுவலகத்தின் முதலாவது நிதி நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment