கல்முனை மாநகர சபையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்புப் பிரிவை வினைத்திறன் மிக்கதாக இயங்கச் செய்வதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள தீயணைப்புப் படைப் பிரிவினர் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாநகர சபையில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு முதல்வர் மேலும் குறிப்பிட்டதாவது;
“தீ அனர்த்தங்கள் தொடர்பில் கல்முனைப் பிராந்திய மக்கள் எமது மாநகர சபையை மலைபோல் நம்பியுள்ளனர். நான் உங்களை நம்பியுள்ளேன். நாம் பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்றோம். அதனை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
நீங்கள் அனைவரும் இத்துறையில் போதிய பயிற்சிகளைப் பெற்று திறமை மிக்கவர்களாக மாற வேண்டும்.
அனர்த்தங்கள் எதுவும் சொல்லி விட்டு வருவதில்லை அதிலும் தீ விபத்து என்பது மிகவும் ஆபத்தானதாகும். அதனைக் கட்டுபடுத்துகின்ர விடயத்தில் ஒரு செக்கன் கூட நாம் தாமதம் காட்ட முடியாது. அப்படி எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ள நீங்கள் மிகவும் விழிப்புடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இருக்க வேண்டும்.
இப்போது நமது மாநகர சபையில் உள்ள வளங்களைக் கொண்டு நமது பணிகளை ஆரம்பிக்க முயற்சிப்போம். காலக்கிரமத்தில் இப்பிரிவுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு நான் தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். எல்லாவற்றுக்கும் உங்களது முழுமையான ஒத்துழைப்புகளை நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாநகர முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், தீயணைப்புப் பிரிவு பொறுப்பாளர் ஏ.எல்.ஆசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment