பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் சேதமாக்கபட்டு கல்வித்துறையில் முன்னிலையில் இருந்த தமிழ் இனத்தின் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் பின்தள்ளப்பட்டன. காலம் காலமாக பாதுகாக்கப்பட்ட தமிழர் கலாச்சாரம் சிதைவடைக்கபட்டன. இதன் காரணமாக இன்றும் கூட இலங்கைத் தமிழர்கள் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் தற்போது யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டு தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ ஆரம்பித்துள்ளனர். தேவையற்ற நடைமுறைக்குப் பொருத்தமற்ற மக்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடிய வாதங்களை தவிர்த்து யுத்தத்தால் பல்வேறு வழிகளிலும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களின் கல்வி பொருளாதார விவசாய துறைகளை மேம்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்க் கொள்வதே தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் எமது மக்களுக்கு இன்று செய்ய வேண்டிய முக்கிய கடமையாகக் காணப்படுகின்றன.
இன்று வடக்கு கிழக்குத் தமிழர் பகுதிகளில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்க் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அபிவிருத்தித் திட்டங்கள் யார் செய்கிறர்கள்? எந்த நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறர்கள்? என்பது எமக்கு முக்கியமல்ல. அதன் மூலம் முழுமையான பயனை எமது தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நாம் முயற்சி செய்வதே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் முக்கியமானதும் இன்றியமையாததுமான பணியாகக் காணப்படுகின்றன.
அந்த அடிப்படையில் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச அவர்கள் எதிர்வரும் 12, 13, 14 ஆம் திகதிகளில் இப்பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எனவே இந்த நிகழ்சித் திட்டங்களில் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரைவைப் பெற்றுக் கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதில் கலந்து கொள்வதே சிறந்தது.
ஏனெனில் அப்போது தான் இத் திட்டங்களில் காணப்படுகின்ற குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி இவ் அபிவிருத்தித் திட்டங்களின் முழுமையான பயன்களைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியும்.
அதைவிடுத்து தமது சுயநல அரசியல் காரணங்களுக்காக இதில் கலந்து கொள்ளாமல் அவைகளுக்கு தடையாக இருப்பது தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் மிகப் பெரிய துரோகமாகவே எதிர்காலத்தில் தமிழர்களால் பார்க்கப்படலாம். எனவே இது சம்பந்தமாக வடக்கு தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு காலத்திற்கு ஏற்றவாறு சிறந்த தீர்மாணம் மேற்க் கொள்வதே தமிழ் தேசியக் கூட்டமைப்பி செய்ய வேண்டிய சிறந்த முடிவாகும்.

0 comments :
Post a Comment