மட்டக்களப்பு: ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து உதவி வழங்கும் நிகழ்வு

 த.நவோஜ்-
ட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக பண்டாரியாவெளி அறிவாலய கல்வி மேம்பாட்டு நிதியத்தின் மூலம் அதன் நிறுவுனர் பிரான்ஸில் வசிக்கும் அலையப்போடி நல்லரெத்தினத்தின் நிதியுதவியினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேச கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.வ.சோதிலிங்கக் குருக்கள், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய (நிருவாகம்) பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜீ.சிறிநேசன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்;) எஸ்.சிறிதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி) எஸ்.மகேந்திரகுமார், கோட்டக் கல்வி அதிகாரிகளான என்.தயாசீலன், ரி.சோமசுந்தரம், எஸ்.முருகேசப்பிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் ந.புவனசுந்தரம், கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளர் மா.மோகனதாஸ், உதவி வழங்கியவரின் சகோதரி திருமதி.அற்புதமணி மேகநாதன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அனைத்து பாடசாலையின் அதிபர்கள், 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் மாணவர்களை சித்தி பெறச் செய்த ஆசிரியர்கள், சித்தி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சித்தியடைந்த 58 மாணவர்களுக்கு பண்டாரியாவெளி அறிவாலய கல்வி மேம்பாட்டு நிதியத்தின் நிறுவுனர் பிரான்ஸில் வசிக்கும் அலையப்போடி நல்லரெத்தினத்தின் நிதியுதவியினால் ஒரு மாணவருக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் வங்கிக் கணக்கில் வைப்பிட்டு புத்தகம் வழங்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனால் மாணவர்களை பாராட்டி நினைவுச் சின்னமும், மக்கள் வங்கியினால் கொப்பி, புத்தகப்பை, தொப்பி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் நீர் அங்கி என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு சித்தி பெற்ற மாணவர்களுக்கு மாலை அணிவித்து கலந்து கொண்ட அதிதிகளால் இவர்களுக்கான வங்கிப் புத்தகம் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இவ் உதவியை வழங்கிய பண்டாரியாவெளி அறிவாலய கல்வி மேம்பாட்டு நிதியத்தின் மூலம் அதன் நிறுவுனர் பிரான்ஸில் வசிக்கும் அலையப்போடி நல்லரெத்தினத்திற்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கும் வலய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :