பி. முஹாஜிரீன்-
ஒலுவில் பிரதேச கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணி தொடர்கிறது.
இது தொடர்பாக தெரியவருவதாவது, தமது சக நண்பர்ளுடன் இன்று காலை ஒலுவில் கடலில் சில இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். இவர்களுள் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒலுவில் 7 ம் பிரிவைச் சேர்ந்த சக்காப் ஜூமான் (வயது 21) என்பவரே காணமல் போயுள்ளார்.
மேலும் இச்சம்பவத்தில் நீரில் மூழ்கிய எம். அஸ்கி (வயது 13) என்ற மாணவன் காப்பாற்றப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போனவரை உறவினர்களும், பிரதேச மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment