திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி சம்பூர் முகாமில் பசிதாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்த தாமோதரம் குடும்பத்திற்கு தமிழ் சீ.என்.என். இணையத்தளம் முன்னெடுத்து வரும் பணியின் மூலம் நோர்வே தமிழ் பெண்மணியின் அனுசரணையில் ஒரு வருடத்திற்கு தேவையான அரிசுப் பொதிகள் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முதியவர் தாமோதரத்தினை சனிக்கிழமை நண்பகல் வேளை நேரடியாக சென்று பார்வையிட்டு நலன் விசாரித்ததுடன், அவரின் செலவுக்காக ஒரு தொகைப் பணத்தினையும் வழங்கி வைத்தார்.
பின்னர் கிளிவெட்டியுள்ள சம்பூர் அகதி முகாமிற்குச் சென்று தமிழ் சீ.என்.என். இணையத்தளத்தின் உதவி மூலம் அக்குடும்பத்தினரின் இல்லத்திற்கு சென்று அரிசுப் பொதிகளை பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வழங்கி வைத்தார்.
இவர்களின் வறுமையின் உச்சகட்டமே கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் வாழ்ந்து வந்த தாமோதரம் என்னும் முதியவர் கழுத்தை அறுத்து கொலைக்கு தயாரான செயற்பாட்டை இட்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் விஜயம் அமைந்தது.
இம்முகாம்களில் வாழும் பல குடும்பங்கள் மட்டக்களப்பு இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் போது மட்டக்களப்பு மவட்ட இந்து இளைஞர் பேரவை மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனால் பராமரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் வரவையிட்டு அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை சம்பூர் மக்கள் 2006ம் ஆண்டு யுத்த சூழலால் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் இடைத்தங்கல் முகாமில் வசித்து பின்னர் 2007ம் ஆண்டு பகுதியில் திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி, பட்டித்திடல், கட்டபறிச்சான், மணற்சேனை ஆகியவற்றில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் 848 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இம்மக்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவு கொடுப்பனவு 2012ம் ஆண்டு நிறுத்தப்பட்டதால் இம்மக்கள் அன்றாட உணவுக்கும் மிகுந்த கஷ்ரத்தை அனுபவிக்கின்றனர். அரசாங்கம் சம்பூர் பகுதியில் இவர்களை குடியேற்றாது இடைத்தங்கல் முகாம்களில் துன்பத்துடன் வாழ் வைத்துள்ளது.
0 comments :
Post a Comment