வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தி ஆகின்றன.1990யில் வடமாகாணத்தில் மன்னார் , முல்லைத்தீவு , கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளை பூர்வீகமாக கொண்ட 20000 குடும்பங்களைச் சேர்ந்த 100000 மக்கள் வெறுங்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.
பலவந்த வெளியேற்றத்ததை தடுக்க அப்போதைய ஆட்சியில் இருந்த பிரேமதாச அரசு ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை . தமிழர் விடுதலை கூட்டணியினரும்,இந்து கிறிஸ்தவ மதகுருமார்களும் இவ்விடயத்தில் தலையிட்டு எதனையும் செய்ய முடியாத நிலைக்கு ஆட்பட்டிருந்தனர்.
அயல்வீட்டு அண்ணன் , தம்பிகளாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதை பெரும் பாலான தமிழ் உறவுகள் விரும்ப வில்லை .இவ்வெளியேற்றம் வடக்கில் ஏற்பட்ட வரலாற்றுத் தவறாகும் .இவ்வாறான ஒரு தவறை சோழர்கள் யாழ்ப்பாணத்திலும் , போர்த்துக்கேயர் கொழும்பு , காலி போன்ற பகுதிகளிலும் செய்துள்ளனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் அயராத முயற்சியின் காரணமாக கணிசமான முஸ்லிம் குடும்பங்கள் வடக்கில் மீளக்குடியேறியுள்ளன. புத்தளம் ,அனுராதபுரம் , குருணாகல் , பாணந்துறை , நீர் கொழும்பு , கொழும்பு போன்ற பிரதேசங்களில் வசிக்கும் வடபுல உறவுகள் மீளக்குடியேற பெரிதும் விரும்புகின்றனர் . ஆனால் குடியேற்ற காணிப்பிரச்சினைகள் . பௌதீக வளப்பிரச்சினைகள் , நிரந்தர வீடுகள் இன்மை போன்றவற்றால் பின்னிற்கின்றனர். ஆகவே, அம்மக்களை மீளக்குடியேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தமது வாக்குப்பதிவுகளை எக்காரணம் கொண்டும் பிற மாவட்டங்களில் பதிந்து விடக்கூடாது.
உலகில் 56 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அவை பொருளாதாரரீதியாகப் பலமாகவுள்ளன. இந்த நாடுகளின் பொருளாளதார நலனைக் கருத்தில்கொண்டு இலங்கை சுமுக உறவை கொண்டுள்ளது. வடபுல முஸ்லிம்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர்? முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காகவாகும்.
இதனால் இம்மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு முஸ்லிம் நாடுகளுக்கு உள்ளன.நாட்டின் ஜனாதிhதியின் அழைப்பை ஏற்று சர்வதேச இஸ்லாமிய பேரவைச் செயலாளர் இயாத் அமீன் அவர்கள் வருகைதரவுள்ளார். அவரை
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் சந்திப்பதுடன் , அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் அவரை வடபுலத்திற்கு அழைத்திச் சென்று வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை நேரடியாக காண்பிக்க வேண்டும்.இதனால் வடபுல முஸ்லிம்கட்கு விடிவு ஏற்படும்.
0 comments :
Post a Comment