தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கிறது என்பதை பொது வேட்பாளர்கள் ஏற்க வேண்டும்-மனோ கணேசன்

ளுகின்ற அரசு கூட்டணியின் பொது வேட்பாளர் தானே என ஜனாதிபதி மகிந்த கூறுகிறார். அதுபோல் எதிரணியின் பொது வேட்பாளர் ஒருவரும் உருவாகி வருகிறார். இந்த இரண்டு வேட்பாளர்களை முன்னிறுத்தும் இரண்டு பிரதான கட்சிகளும், இந்த நாட்டில் நிலவும் விலைவாசி,  சம்பள உயர்வு, ஊழல், மாணவர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பு என்ற அனைத்து பிரச்சினைகளையும் பற்றியும் பேசுகின்றன.
 
இந்த பிரச்சினைகளுடன் இந்த நாட்டில் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை ஒன்றுள்ளது எனபதையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை தீர்வுக்கான முழுமையான  திட்டத்தையும், உடன்படிக்கையும் தம் தேர்தல் அறிக்கைகளில் முன்வையுங்கள் என நான் இவர்களிடம் கோரவில்லை. இப்படி கோரி, இங்குள்ள இனவாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்ய இடமளிக்க போவதில்ல. ஆனால், அதற்காக இனப்பிரச்சினையே இல்லை என்பது போல் நாடகமாடுவதை அனுமதிக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
 
இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சினை இருக்கின்றது. இந்நாட்டின் சிங்கள தலைவர்கள், தமிழ் தலைவர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அவற்றின் மூலம்  பல ஆவணங்கள் உருவாக்கபட்டுள்ளன. இன்றைய ஜனாதிபதி மகிந்த கூட இப்படியான சர்வ கட்சி மாநாடு நடத்தினார்.  அதன்மூலம் ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டது. ஆகவே இல்லாத பிரச்சினை பற்றி பேச இவர்கள் முட்டாள்கள் அல்ல. இவர்களுடன் பேசிய தமிழ் தலைவர்களும் முட்டாள்கள் அல்ல.
 
இந்த நாட்டில் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை ஒன்று இருப்பதை மறந்து விட்ட நிலையிலேயே இன்று ஜனாதிபதி தேர்தல் களம் உருவாகி வருகிறதா  என்ற சந்தேகம் எழுகிறது. ஆட்சியில் உள்ள அரசாங்கம் நடைமுறையில்  உள்ள மாகாணசபைகளுக்கு உயிரூட்டுவதை தவிர்த்து அவற்றின் அதிகாரங்களை  வெட்டி குறைப்பதில் கவனம் செலுத்துகிறது.
 
இந்த நேரத்தில் எதிரணியில் இனப்பிரச்சினையை பற்றி அறவே பேசாமல் இருந்து விட வேண்டும் என்ற மாதிரியான சிந்தனை நிலவுகிறது. இந்த கடந்த சில வாரங்களாக பல கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ள என்னால் அவதானிக்க முடிகிறது. இனப்பிரச்சினை தீர்வு பற்றி பேசினால் அரசு தரப்பு அதை பயன்படுத்தி சிங்கள மக்களை தூண்டி விட்டு விடும் என்று  எச்சரிக்கை விடப்படுகிறது. இதை  தமிழ் கட்சிகள் உணராமல் இல்லை. பொது எதிரணி வேட்பாளரின்  தேர்தல் அறிக்கையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான ஒட்டு மொத்த திட்டமும் வெளிபடுத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை. அதை நிறைவேற்று அதிகாரமுறைமையை ஒழித்துவிட்டு வரும் புதிய பாராளுமன்ற அரசு பொறுப்பேற்க வேண்டும்.
 
ஆனால், அதற்காக தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இந்நாட்டில் இன்றளவும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்ற உண்மையை கூட ஏற்றுக்கொள்ளாமலும்,  கணக்கில் எடுக்காமலும், எந்த ஒரு பொது வேட்பாளரும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை எப்படி எதிர்பார்க்க முடியும்?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :