அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியின் பெயரை நீதிபதி ஹுசைன் வீதி என பெயர் மாற்றம் செய்வது தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயம் பெறப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியின் பெயர், நீதிபதி ஹுசைன் வீதி என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கோரும் பிரேரணை ஒன்று கடந்த 23ஆம் திகதி கல்முனை மாநகர சபை அமர்வில் பிரதி முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்டு- அப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
எனினும் பொது மக்களின் அபிப்பிராயம் பெறப்பட்ட பின்னரே இவ்வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இது தொடர்பில் அவ்வீதியில் வசிக்கும் பொது மக்கள் எழுத்து மூலம் அபிப்பிராயங்கள் ஏதும் தெரிவிக்கும் பட்சத்தில் அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அதுவரை வர்த்தமானி அறிவித்தலுக்கான நடவடிக்கை எதுவும் தன்னால் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment