அட்டாளைச்சேனைபிரதேச ஒலுவில் கடலிம் மூழ்கி மரணித்த இளைஞரைத்தேடும் பணி தொடர்கிறது-படங்கள்









ஒலுவில் அமீர்-

லுவில் பிரதேச கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அவரைத் தேடும் பணிகளில் ஒலுவில் துறைமுக கரையோரகடற்படை வீரர்களுடன் பொதுமக்களும் இணைந்து தேடுதல்ல் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, தமது சக நண்பர்ளுடன் இன்று காலை ஒலுவில் கடலில் சில இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். இவர்களுள் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒலுவில் 7 ம் பிரிவு தேத்தாவடி வீதியைச் சேர்ந்த ரஷாக் (சக்காப்) ஜூமான் (வயது 21) என்பவரே காணமல் போயுள்ளார்.
இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் வெளிநாட்டில் இருந்து வந்தவர் இன்னும் 10 தினங்களில் வெளிநாடு செல்வதற்காக இருந்தார்.

மேலும் இச்சம்பவத்தில் நீரில் மூழ்கிய எம். ஏ.அஸ்கி (வயது 13) என்ற மாணவன் காப்பாற்றப்பட்டு ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அங்கிருந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

காணாமல் போனவரை உறவினர்களும், பிரதேச மீனவர்களும் ஒலுவில் துறைமுகக் கரையோர கடற்படை வீரர்களுடன் பொதுமக்களும் இணைந்து தேடுதல் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :