குழப்பத்தில் மயில் கட்சி:அமைச்சர் றிசாத் பதியுதீனின் பக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாய்ந்துள்ளார்!

ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள பனிப் போரில் அக்கட்சியின் தலைவரான கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாத் பதியுதீனின் பக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாய்ந்துள்ளார் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் அக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக்கிற்கும் இடையில் தற்போது பனிப் போர் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

இதன் ஒரு அங்கமாக ஹூனைஸ் பாரூக் சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்வதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தடைவிதித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூகினை தலைவராகக் கொண்ட ஹூனைஸ் பாரூக் மன்றம் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இளைஞர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

முசலி, சிலாபத்துறை முஸ்லிம் மஹாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த 44 அணிகள் கலந்துகொண்டன. இதன் இறுதிப் போட்டியில் புத்தளம் டகன்ஸ் அணி மற்றும் அஹத்தி முறிப்பு யுனைட்டட் அணி ஆகியன மோதின. இதில் நான்கு நான்கு விக்கட்டுக்களால் புத்தளம் டகன்ஸ் அணி வெற்றி பெற்று ஹூனைஸ் பாரூக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

இந்த பரிசளிப்பு நிகழ்வில் தபால் சேவைகள் பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவருமான சனத் ஜெயசூரிய மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்ளக் கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள பனிப் போரில் அக்கட்சியின் தலைவரான கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாத் பதியுதீனின் பக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாய்ந்துள்ளார் .

இதன் காரணமாக இந்த நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்ளக் கூடாது என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் இறுதிப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான உதித் லொக்குபண்டாரஇ முத்தலிப் பாவா பாறுக்இ வட மேல் மாகாண சபை உறுப்பினர் சுமல் திஷேரா மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் பியும் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் வினவுவதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீனை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.

(ஏனைய இணையத்தள செய்தி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :