ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கான சகல தகுதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருக்கின்றது என்று பொது பலசேனா அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் பொதுசெயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதுவரையிலும் செய்த சேவைகளை பார்க்கும் போது பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கே தகுதியிருக்கின்றது.
தான் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு இன்னும் காலமிருப்பதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா, யாரை ஆதரிக்கும் என்பது தொடர்பில், எதிர்க்கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment