ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாச அக்கட்சிக்குள் பிளவை உண்டுபண்ணுகிறார் என ஜனநாய கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் எதிர்கட்சி தலைவரின் காலை வாரவேண்டாம் எனவும், கண்ணியமான அரசியலில் ஈடுபடுமாறும் சஜித்திற்க்கு பகிரங்க வேண்டு கோளையும் அவர் விடுத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கப்ப போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுடைய கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வேட்பாளரை நாங்கள் ஆதரிக்க மாட்டோம், ஆனால் தான் எங்கு நிற்கிறார், யாருடன் நிற்கிறார் என்பதை உணர்ந்துள்ள வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

0 comments :
Post a Comment