வரவு–செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்துக்காக எதிர்க்கட்சி களின் வேண்டுகோளை அடுத்து மேலதிகமாக நான்கு நாட்களை ஒதுக்கு வதற்கு அரச தரப்பு கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நவம்பர் 18ஆம் திகதி நடைபெறவிருந்த வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 24ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 24ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற ரீதியில் வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார். மறுநாள் 25ஆம் திகதி முதல் நவம்பர் முதலாம் திகதி வரை வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முதலாம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம்பெறும்.
வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 3ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறும். 24ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
0 comments :
Post a Comment