ஞானசார அவர்களின் ஞான சூண்யம்

عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال : أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله ، وأن محمدا رسول الله ، ويقيموا الصلاة ، ويؤتوا الزكاة ، فإذا فعلوا ذلك ، عصموا مني دماءهم وأموالهم ، إلا بحق الإسلام ، وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم .

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் அவ்வாறே உண்மையாகவே முகம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் ஆவார்கள் என்றும் சாச்சியம் கூறி அத்துடன் தொழுகையினை நிலை நாட்டி ஜக்காத் வரியினையும் செலுத்தும் வரை மனிதர்களுடன் போராடுமாறு நான் கட்டளைப் பிறப்பிக்கப் பட்டுள்ளேன் என்று அல்லாஹ்வின் திருத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இபுனு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் : புஹாரி)

மேற்படி நபி வழிச் செய்தியின் பொருள் பற்றி பொது பள சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவர்கள் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்ததை ஊடகங்கள் வாயிலாகப் பார்க்கக் கிடைத்தது ஆதலால் மேற்படி நபி வழிச் செய்தி என்ன சொல்கின்றது என்பது பற்றி எம்மால் முடிந்த வரை ஞானசாரவிற்குத் தெளிவு படுத்தலாம் எனக் கருதுகின்றோம்.

மேற்படி நபி வழிச் செய்தியில் பிரயோகிக்கப்பட்டடுள்ள أمرت أن أقاتل எனும் வாசகத்தில் இடம் பெற்றுள்ள أقاتل எனும் சொல் ஞானசார அவர்களால் திட்டமிட்டு திரிபு படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. உண்மையில் ஞானசார அவர்கள் குறிப்பிடுவது போன்று மாற்றுமதத்தவர்களை அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை கொன்று குவிக்க வேண்டும் என்று இஸ்லாம் ஒரு போது கட்டளை இட்டது கிடையாது ஞானசார அவர்களின் இந்த வியாக்கியானம் அவரின் ஞான சூண்யத்தினயே உலகறியச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

ஞானசாரர் நினைப்பது போன்று அரபு மொழி என்பது சிங்களத்தைப் போன்ற அல்லது ஏனைய மொழிகளைப் போன்ற ஒரு மொழி கிடையாது. உலகில் ஆயிரம் ஆயிரம் மொழிகள் இருந்த போதிலும் அவற்றுள் தனித்துவம் வாய்ந்த பொருட்செறிவு கொண்ட ஒரு தன்னிகரற்ற மொழியாகும் அது. அரபு மொழிக்கு நிகர் அரபு மொழியேயாகும்;. ஆதலால்தான் உலகில் ஆயிரம் ஆயிரம் மொழிகளுக்கு மத்தியில் அனைத்து மொழிகளையும் படைத்த படைப்பாளனாகிய அல்லாஹ் அல்-குர்ஆனை அருளுவதற்கு அரபு மொழியைத் தெரிவு செய்தான்.

அல்லாஹ் கூறுகின்றான் : அலிஃப்ää லாம்ää றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளக்கிக் கொள்வதற்காகää அரபி மொழியிலான குர்ஆன் ஆகிய இதனை நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)

உலகில் பல்வேறு மொழிகள் இதுப்பது அல்லாஹ்வின் அத்தாட்ச்சிகளாகும்.

மேலும் வானங்களையும்ää பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும்ää அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. .(அல்-குர்ஆன் 30:22) 

அரபு மொழி என்பது குறைகளற்ற முழுமை பெற்ற ஒரு மொழியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும்ää இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும்ää அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காகää இந்தக் குர்ஆனை எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்) (அல்-குர்ஆன :39:28)

எனவே அரபு மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு விடயத்தை அதே மொழியைக் கொண்டே அன்றி வேற்று மொழிகளில் விளங்குவதென்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். அரபு மொழி பற்றி எதுவும் அறியாத ஞானசாரர் அரபு மொழியை அடிப்படையாகக் கொண்ட அல்-குர்ஆனையும் அல்-ஹதீதையும் சிங்கள மொழி பெயர்ப்பக்களை வைத்து விமர்சிப்பதென்பது அவரின் முட்டாள் தனத்தின் அதி உச்சகட்டமாகும். 

மேற்படி நபி வழிச் செய்தியில் இடம் பெற்றுள்ள أقاتل எனும் அரபுச் சொல் பரந்து விரிந்த கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது அதனை நாம் இந்த இடத்தில் ஒருவருடன் ஒருவர் போராடுதல் என்று சொல்லலாம் இந்தப் போராட்டம் என்பது இடம் பொருள் ஏவல் என்பதற்கிணங்க காலத்துக்குக் காலம் இடத்திற்கு இடம் வேறுபடலாம் உதாரணமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய நூற்றாண்டு அறிவியல் நூற்றாண்டாகும் இன்று அறிவியல் ரீதியான போராட்டமே தேவைப்படுகின்றது.

அவ்வாறே இஸ்லாமியப் பிரச்சாரம் என்பது ஞானசாரர் கூறுவது போன்று ஆயுதப் போராட்டத்தை முதன்மைப் படுத்திய ஒரு போராட்டம் கிடையாது மாறாக அது அறிவியல் போராட்டத்தையே முதன்மைப் படுத்துகின்றது இஸ்லாமியப் பிரச்சாரம் பற்றிக் கூறுகின்ற நூற்றுக்கணக்கான இறைவசனங்கள் ஆயுதப் போராட்டத்தை விட அறிவியல் போராட்டத்தையே வலியுறுத்துகின்றனவாய் அமைந்துள்ளதை அறிவுள்ளவர்கள் எழிதில் புரிந்து கொள்வார்கள்.

இஸ்லாமிய அழைப்புப் பணியின் அழகிய அனுகுமுறைகளைத் தெரிந்து கொள்வதற்காக வேண்டி ஒரு சில உதாரணங்களை அல்-குர்ஆனில் பார்ப்போம். 

அல்-குர்ஆனின் மூலம் அறிவியல் ரீதியாகப் போராடுதல்:

அல்லாஹ் கூறுகின்றான் : அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.மேலும்ää நாம் நாடியிருந்தால்ää ஒவ்வொரு ஊரிலும்ää அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம். ஆகவேää (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.(அல்-குர்ஆன் 25:50-52)

அழகிய முறையில் அறிவார்தத்த ரீதியாக மக்களை அழைத்தல்: 

அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்ää அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்ää அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன்ää அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள்ää பொறுத்துக் கொண்டால்ää நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். (நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிட வேண்டாம். நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோää அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். (அல்-குர்ஆன் 16: 125-128)

மாற்று மதத்தவர்களுக்கும் நன்மை செய்தல்:

அல்லாஹ் கூறுகின்றான் : மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும்ää உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும்ää அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். (அல்-குர்ஆன் 60:08)

இஸ்லாத்தில் வலுக்கட்டாயம் கிடையாது: 

அல்லாஹ் கூறுகின்றான் : (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால்ää எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2: 256)

நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்தல்:

(நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம். (அல்-குர்ஆன் 23:96)

அழகிய முறையிலன்றி தர்க்கம் செய்தல் கூடாது.

இன்னும்ää நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்துää (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; ''எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டுää நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்"" என்று கூறுவீர்களாக. (அல்-குர்ஆன் 29:46)

இப்படியான வசனங்கள் வாண்மறை அல்-குர்ஆனில் நூற்றுக்கணக்கில் காணக்கிடக்கின்ற போது திருவாளர் அஞ்ஞானசார அவர்களுக்கு இவைகள் தெரியாது போனது ஆச்சரியமே.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
முனாப் நுபார்தீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :