அகில இலங்கை ரீதியில் நிந்தவூர் நிக்சி அஹமட் சிறந்த வீரராக தெரிவு!

சுலைமான் றாபி-

னுராதபுரத்தில் நடைபெற்றுவரும் இலங்கையின் 40வது தேசிய விளையாட்டுப்போட்டியின் மென்பந்து (Soft Ball) கிரிக்கெட்துறையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த வீரராக நிந்தவூரைச் சேர்ந்த நிக்சி அஹமட் விளையாட்டு அமைச்சினால் இன்று (27.10.2014) 10,000.00 ரூபா பணப்பரிசும், ஞாபகச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அனுராதபுர விளையாட்டுத்தினைக்களத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் மேற்படி போட்டிகளின் கிரிகெட் போட்டிகளுக்கான இறுதிநாள் நிகழ்வின் பரிசளிப்பிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் 09 மாகாணங்களுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் நிக்சி அஹமட் கிழக்கு மாகாணம் சார்பாக விளையாடி தேசிய போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு பங்களிப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :