அஸ்ரப் ஏ சமத்-
இன்று(27)ஆம் திகதி காலை வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கறை ஓரத்தில் சடலம் ஒன்று காணப்பட்டது. வெள்ளவத்தை பொலிசாருக்கு இன்று காலை கிடைத்த தகவலின்படி சடலத்தை அண்டிய பிரதேசத்தில் போடப்பட்டுள்ள கற்களின் மேல் சடலத்தை மூடி வைத்துள்ளனர்.
இச் சடலத்தின் அருகே இவர் அணிந்திருந்த டெனின் காற்சட்டையும் காணப்படுகின்றது. இவரின் உடம்பில் காயங்கள் காணப்படுகின்றன. இவர் மஹியங்களை மாத்தளை வீதியில் உள்ள குக் கிராமத்தைச் சேர்ந்தவர் வயது 27 திருமணமாகாதவர். வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் நிருவாகப்பகுதியில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது பெயர் கே.பி. ஆரியரத்தின சுனில் (பொலிஸ் உத்தியோகத்தர்;இவரது மரணம் விபத்தா, அல்லது கொலையா என்பது பற்றி பொலிசாரும், குற்றத்தடுப்புப் பிரிவினர், மற்றும் பிரதேதப்பரிசோதனையின் பின்னரே தெரிவிக்க முடியும் என அவ்விடத்தில் கடமையுள்ள பொலிசார் தெரிவிக்கின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment