சம்மாந்துறைப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை முதலை கடித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
குளத்தில் குளிப்பதற்காக தனது சகோதரிகளுடன் சென்றபோது முதலையில் அகப்பட்ட நிலையில் சகோதரிகள் முதலலையுடன் போராடிக் காப்பாற்றியபோதும் ஒரு காலை இழக்கவேண்டிய நிலைக்கு ஒரு சகோதரி உள்ளானார்.
மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஆறு பெண் சகோதரிகள் உள்ளனர். நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கும் கஸ்டப்படும் இந்தக் குடும்பத்திற்கு முதலை கடித்து ஒரு பெண்ணின் காலை இழந்தது இன்னும் பல சோதனைகளுக்கும், கஸ்டத்திற்கும் உள்ளாக்கியது.
இந்தக் குடும்பத்தின் நிலையைப் பார்க்கின்றபோது எவருக்கும் கவலை வராமல் இருக்காது.
இந்தக் குடும்பத்தின் நிலையைக் கேள்விப்பட்ட அம்பாரை மாவட்டத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதலை கடித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணிற்கு தையல் இயந்திரத்தை வழங்கியதுடன், அவர்களது குடும்ப வாழ்வாதாரத்திற்கான சில ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வந்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரோடு சென்ற ஒருவர் இந்த விடயங்களை படம் எடுக்க முற்பட்டபோதும் இளம் பாராளுமன்ற உறுப்பினர் அதனை நிராகரித்து இவ்வாறான விடயங்களை படம் பிடித்துக் காட்டுவது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு உதவி செய்த பாராளுமன்ற உறுப்பினரை பலரும் பாராட்டியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினரைப் போன்று பணம் படைத்தவர்கள் பலரும் முதலைக் கடியினால் காலை இழந்த பெண்ணுக்கும் அவரது கஸ்டப்பட்ட குடும்பத்திற்கும் உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும் என்பதையும் வேண்டிக் கொள்கின்றோம்.
.jpg)
0 comments :
Post a Comment