ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் பயணம் சம்பந்தமாக அடுத்த சில வாரங்களுக்குள் முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுக்க உள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதே தன்னுடையதும் ,கட்சியினதும் நிலைப்பாடு எனவும் அரசாங்கமே தற்போது அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடானது கல்லில் செதுக்கப்பட்ட கோடு போன்று எப்போது மாறாது.
அரசாங்கத்திடம் கட்சி முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்மானங்கள் எதனையும் எடுக்காது போனால், அரசாங்கத்தில் இருப்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
ஆனால் அப்படியான தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அரசாங்கத்தில் இருந்து விலகுவதா அல்லது தொடர்ந்தும் இருப்பதா என்பதல்ல இங்கு பிரச்சினை.
அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்பதே கட்சியின் ஒரே நோக்கம். ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அவரிடம் இருந்து இதுவரை எந்த பதில்களும் கிடைக்கவில்லை எனவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment