பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு 25-10-2014 நேற்று சனிக்கிழமை இரவு புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் இஸ்மாலெவ்வை,சட்டத்தரணி முஹம்மது உவைஸ்,காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பதுர்தீன், காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஐ.உஸனார் (ஜேபி),ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு இமாம்களின் பிள்ளைகளுக்கும் ,முஅத்தினார் ஒருவரின் பிள்ளைகளுக்கும் அதிதிகளினால் விருதும்,பணமும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சமாதான நல்லிணக்க விஜயம் தொடர்பான தொகுப்பு அடங்கிய இறுவெட்டும் குறித்த சம்மேளனத்தின் 15வது மகாநாடு தொடர்பான தொகுப்பு அடங்கிய இறுவெட்டுக்களின்; முதற் பிரதி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வையிடம் வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.
இங்கு சிறப்புரையை வெலிகம ஹிழுறியா அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எஸ்.ஏ.எம்.அனஸ் (ரஸாதி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), உலமாக்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment