இவ்வாண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் 09முதல் 18வரை நடாத்த இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்தக் கால அட்டவணைக்கேற்ப இப்பரீட்சையை நடாத்தவே பரீட்சைத்திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இப்பரீட்சைக்கு 1176 பரீட்சை நிலயங்களில். 5 இலட்சத்து 77 ஆயிரத்து 84 பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளனர். இப்பரீட்சைக்கான நேர அட்டவணையை திணைக்களத்தின் றறற.னழநநெவள.டம எனும் இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.
இதுவரை இத்திகதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் திட்டமிட்டபடி டிசம்பரில் உரிய காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடை பெறும் எனபரீட்சை ஆணையாளர் நாயகம் எம்.எம்.என். ஜெயந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2015 ஜனவரி மாதத்தில் பாப்பரசரின் இலங்கை வருகையும், ஜனாதிபதித் தேர்தலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், பரீட்சை தினங்களிலும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பரீட்சை இத்தினங்களில் நடைபெறுமா? ஏன எழுப்பப்பட்ட கேள்விக்கே, பரீட்சை ஆணையாளர் நாயகம், திட்டமிட்டபடி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 09 முதல் 18 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment