பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய வீதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 26-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த வீதி முன்றலில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உள்ளிட்ட அதிதிகளினால் குறித்த வீதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வீதியை அழகுபடுத்தும் முகமாக வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டு வீதி அழகுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment