ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 9யில்?

னாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இந்நிலையில் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காம் ஆண்டு, இந்த வருடம் நவம்பர் மாதம் 18ஆம் திகதி பூர்த்தியாகிறது. 

நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர், தேர்தல் அறிவிப்பு விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஒருவர் பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏழாவது நாடாளுமன்றத்துக்கான பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதற்காக 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 08ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்டது. அதில் ஜனாதிபதியாக தெரிவான மஹிந்த ராஜபக்ஷ, நவம்பர் மாதம் 18ஆம் திகதி இரண்டாவது தடவையாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவருடைய ஆறுவருடகால பதவிகாலம் 2016ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதியுடன் நிறைவடையவிருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :