ஜனவரி 9 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வு

திர்­வரும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆராய்ந்­து­வ­ரு­வ­தாக அரச தரப்பு வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி தேர்­தலை அடுத்­த­வ­ருடம் ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி நடத்­து­வது குறித்து ஜனா­தி­பதி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் தீவி­ர­மாக ஆராய்ந்­து­வ­ரு­வ­தாக ஜனா­தி­ப­தியின் நெருங்­கிய முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்­த­தாக ராய்ட்டர் செய்தி சேவை தெரி­வித்­துள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் படி ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பத­விக்­காலம் எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டு நிறை­வ­டை­ய­வுள்ள போதிலும் இரண்டு வரு­டங்கள் முன்­ன­தா­கவே ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
அதன்­படி பரி­சுத்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருந்­தந்தை அடுத்­த­வ­ருடம் ஜன­வரி மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் அதற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அவ­ருக்கு ஆட்­சே­பனை இல்லை என்ற விட­யத்தை அண்­மைய வத்­திக்கான் விஜ­யத்­தின்­மூலம் அர­சாங்கம் உறு­தி­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கலாம் எனவும் தக­வல்கள் தெரி­வித்­தன.
காரணம் நாடு ஒன்றில் தேர்தல் பிர­சா­ரக்­காலம் நடை­மு­றையில் இருக்­கும்­போது பரி­சுத்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருந்­தந்தை குறித்த நாட்­டுக்கு விஜயம் செய்­ய­மாட்டார் என்­பது தற்­போ­தைய பாப்­ப­ரசர் கடை­பி­டித்­து­வரும் ஒழுங்­கு­மு­றை­யாகும்.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே பாப்­ப­ர­சரின் விஜ­யத்­துக்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் எதிர்­வரும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நாட்டில் ஜனா­தி­பதி தேர்தல் ஒன்று நடை­பெ­றலாம் என்­ப­தனை அமைச்­ச­ரவை பேச்­சாளர் கெஹெ­லிய ரம்­புக்­வெல அண்­மையில் உறு­தி­ப­டுத்­தி­யி­ருந்தார்.

ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற நான்கு வரு­டங்­க­ளுக்கு மற்­று­மொரு தேர்­த­லுக்கு செல்­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஜனா­தி­ப­திக்கு அதி­காரம் இருப்­பதால் அவர் அந்த உரி­மையை பயன்­ப­டுத்­த­வுள்ளார் என்றும் அமைச்­ச­ரவை பேச்­சாளர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­தலை உறு­தி­ப­டுத்தும் வகையில் அடுத்­த­வ­ரு­டத்­துக்­கான வரவு செல­வுத்­திட்­டத்­தையும் அர­சாங்கம் இவ்­வ­ருடம் முன்­ன­தா­கவே சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

ஒவ்­வொரு வரு­டமும் நவம்பர் மாதத்தில் வரவு செல­வுத்­திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வது வழக்­க­மாகும். ஆனால் இம்­முறை அடுத்த வரு­டத்­துக்­கான வரவு செல­வுத்­திட்டம் இம்­மாதம் 24 ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்டு இறு­தி­வாக்­கெ­டுப்பு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் நிறை­வ­டைந்­த­துமே அர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வது குறித்து கவனம் செலுத்­தி­யது. ஊவா மாகாண சபைத் தேர்­தலில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வாக்கு வங்­கியில் சரிவு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் உட­ன­டி­யா­கவே அடுத்­த­தாக ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு செல்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆரம்­பத்தில் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்­து­வ­தற்கே தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக அறிய முடிந்­தது. எனினும் ஊவா தேர்தல் முடி­வு­களின் பின்னர் ஜன­வரி மாதமே தேர்­த­லுக்கு செல்ல முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இது இவ்­வாறு இருக்க ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­ட­வுள்ளார். அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அவர் மூன்­றா­வது தட­வை­யாக போட்­டி­யிட முடி­யாது என்று முன்னாள் பிர­தம நீதி­ய­ர­சரும் எதிர்க்­கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­களும் தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர்

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்று சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான நிஹான் ஜய­மான்ன மற்றும் கோமின் தயா­சிறி ஆகியோர் கடந்­த­வாரம் தெரி­வித்­தனர்.

கொழும்பில் நடத்­தப்­பட்ட கருத்­த­ரங்கு ஒன்றில் கருத்து வெளி­யிட்ட இந்த சட்­டத்­த­ர­ணிகள் மூன்றாம் தட­வை­யாக போட்­டி­யி­டு­வதில் அர­சி­ய­ல­மைப்பில் எவ்­வி­த­மான சட்ட சிக்­கலும் இல்லை. சிலர் இறந்து அடக்கம் செய்­யப்­பட்ட சட்­டங்­க­ளுக்கு உயிர்­கொ­டுக்க முயற்­சிக்­கின்­றனர் என்று குறிப்­பிட்­டனர்.

மேலும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்று ஒரு சில­ரினால் முன்­வைக்­கப்­ப­படும் தர்க்கம் விவா­திக்­க­வேண்­டிய விட­யமே அல்ல. அவ்­வாறு ஒரு பிரச்­சி­னையே சட்­ட­ததில் இல்லை. ஜனா­தி­ப­தி­யினால் அடுத்தத் தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்றும் இவர்கள் குறிப்­பிட்­டனர்.

மேலும் நாட்டில் கடந்த சில வாரங்­க­ளா­கவே ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான அர­சியல் காய்­ந­கர்த்­தல்கள் மற்றும் நகர்­வுகள் ஆளும் கட்சி மட்­டத்­திலும் எதிர்க்­கட்­சி­களின் சார்­பிலும் நடத்­தப்­பட ஆரம்­பித்­து­விட்­டன.

ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே போட்­டி­யி­ட­வுள்ளார் என்ற நிலையில் மிக அதி­க­ளவில் எதிர்க்­கட்­சி­களே அர­சியல் காய்­களை நகர்த்­தி­வ­ரு­கின்­றன. எதிர்க்­கட்­சி­களின் சார்பில் பொது வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்­து­வதா அல்­லது தனித்­தனி வேட்­பா­ளர்­களை நிறுத்­து­வதா என்­பது குறித்து எதிர்க்­கட்­சிகள் ஆராய்ந்­து­வ­ரு­கின்­றன.

இதே­வேளை லண்­டனில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவும் எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சந்­தித்த்து எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் குறித்து பேச்சு நடத்­தி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்ட்­டுள்­ளது. இதன்­போது ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராக ரணில் விக்­ர­ம­சிங்­கவை போட்­டி­யி­ட­வேண்டாம் என்றும் பொது வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்­கு­மாறும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க கோரி­யுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

மேலும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு இதுவே சிறந்த தருணம் என்றும் பொது­வேட்­பாளர் வெற்­றி­பெற்ற பின்னர் நிறை­வேற்று முறை­மையை நீக்கி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும் என்று சந்திரிக்கா குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் எதிர்க்கட்சிகளினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் எவரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 57.88 வீதமான வாக்குகளை பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார். எதிரணியில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா 40.15 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :