காலநிதி அசீஸ் அவர்களின் 41வது நினைவுதின பேச்சு இன்று கொழும்பு சாஹிராக் கல்லூரியில்






அஸ்ரப் ஏ சமத்-

காலநிதி அசீஸ் அவர்களின் 41வது நினைவுதின பேச்சு இன்று கொழும்பு சாஹிராக் கல்லூரியில் அசீஸ்மன்றத் தலைவர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது மத்திய கிழக்கு நாடுகளின் வங்கிகள் மற்றும் அமாண வங்கிகளில் முகாமைத்துவ பணிப்பாளாராக பணியாற்றி ஓய்வு பெற்ற பட்டய வங்கியாளர் ஐ.ஏ மரிக்கார். -இஸ்லாமிய வங்கிமுறை பற்றி பிரதான உரைநிகழ்;த்தினார்.

காலாநிதி அசீஸ் பற்றி எஸ்.எச்.எம் ஜெமீல் மற்றும் கலாநிதி அசீசின் மகனான எம் அலி அசீஸ், ஆகியோர்கள் தொகுத்த ' அறிவோர் பார்வையில் கலாநிதி அசீஸ்,'; மற்றும் அலி அசீஸ், மறினா இஸ்மாயில் எழுதிய ' யாழ் மூர் வீதியில் எங்களது குடும்பம்' எனும் ஆங்கில நூலும் இவ் வைபவத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நூலின் முதற்பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணரும் கொழும்பு சாஹிராவின் பழைய மாணவருமான ஆனந்த சங்கரியிடம் கையளிக்கப்பட்டது. 

நூல் பற்றி பீ. பாலசிங்கம் உரைநிகழ்த்தினார், 
 
வங்கியாளர் மரிக்கார் அங்கு பிரதான உரையின்போது -
உலகிலே மிகச் சிறந்ததொரு முறையான நிதிக்கொள்கைதான் ' இஸ்லாமிய 'சரியா முறையிலான இஸ்லாமிய நிதிமுறை என தனது சட்ட முதுமாணி நூலில் முஸ்லீம் அல்லாதவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும் அவுஸ்திரேலேயா மொனாஸ் பல்கலைப் பேராசரியரும் இலங்கையருமான வீரமந்திரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலகில் 1450 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய நிதிமுறையை கதிஜா நாயகியும் முகம்மட் இபின் அப்துல்லாவும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கதிஜா நாயகி அவர்கள் முதன் முதலில் நிதி முதலிட்டு பங்குதாரர்கள் முறையில் அறிமுகப்படுத்தி அந்த இலாபத்தை முகாமைப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். 
 
இஸ்லாமிய வங்கிமுறையை ஸ்தாபிப்பதற்கு மலேசியா பாரிய பங்கெடுத்தது. அதன் பின் மத்திய கிழக்கு அரபுநாடுகள் இதில் இணைந்து கொண்டன.

இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் அரச தனியார் வர்த்தக வங்கிகள் லீசிங் வங்கிகளில் பெருமளவில் கடனைப் பெற்று வருடாந்தம் 250 மில்லியன் ருபாவை மட்டும் இந்த வங்கிகளுக்கு வட்டியாக செலுத்துகின்றனர். ஆனால் இஸ்லாமிய நிதி வங்கி முறைபற்றி தெளிவிண்மையால் இவ்வாறாக வட்டியை செலுத்துகின்றனர். என மரிக்கார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :