மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் பணிக்கான தசாப்தங்களை அர்பணித்தவர் மர்ஹும் எம்.எச்.ஏ.சமட்

எம்.எம்.ஏ.ஸமட்-

ரணத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பமுடியாது. கோட்டை கட்டி கோட்டைக்குள் வாழ்ந்தாலும் நமக்கான நேரும் வரும்போது நாம் மரணத்தின் கைதியாகி விடுவோம்.

அந்த நேரம் வரையும்தான் நமது பட்டமும் பதவியும் சொத்தும் அதிகாரமும் நம்மை அழங்கரித்துக்கொண்டிருக்கும். மரணப்பிடிக்குள் சிக்குண்டு நமது சுவாசம் நின்றுவிட்ட வினாடித்துளியில் நமது அத்தனையுமே பூச்சியமாகி விடும்

மாய வாழ்க்கைக்குள் மதிய மயங்கி வாழும் வாழ்நாட்களில் மற்றவர்கள் மனங்களை வெற்றிகொண்டவர்களாக வாழ்ந்து மண்ணைவிட்டு மறைந்தாலும் நாம் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்போம்.

அந்தவகையில், மர்ஹும் எம்.எச்.ஏ. சமட் ஏறக்குறைய 27 வருடம் மக்கள் பிரதிநிதிகளின் பிரத்தியே செயலாளராக பதவி வகித்த காலத்தில் பலரின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளார் என்பது மறுப்பதற்கில்லை.

1963ஆம் ஆண்டு அக்கரைப்பற்றில் பிறந்த மர்ஹும் சமட் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விகளை அக்கரைப்பற்றுப் பாடசாலைகளில் நிறைவு செய்து பின்னர் ஆங்கில ஆசிரியராக பதவியேற்று பணிபுரிந்த சொற்ப காலத்தில் ஆசிரியர் பணியிலிருந்து விடுதலையாகி, மக்கள் பணிக்காக முதன் முதலாக 1987ஆம் ஆண்டு நடைபெற்ற வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவான முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீனீன் பிரத்தியேக செயலாளராக தனது 24 வயதில் இணைந்துகொண்டார்.

அன்றிலிருந்து இறக்கும் வரை மக்கள் பிரதிநிதிகளின் பிரத்தியேக செயலாளராகவே பணிபுரிந்தார். ஏறக்குறைய 3 தசாப்பதங்கள் மக்கள் பிரதிநிதிகளோடு இணைந்து மக்கள் பணிக்காக தனது கால நேரங்களை அர்ப்பணித்தவர் மர்ஹும் சமட்.

ஏறக்புகுறைய 14 வருடங்கள் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியுள்ளார்.

தோற்றத்தில் கம்பீரமாக இருந்தாலும் வெள்ளை மனங்கொண்டவராக வாழ்ந்து மறைந்துவிட்டார் அவர். நகைச்சுவையால் மற்றவர் மனங்களை நனைத்து வாழ்ந்த மர்ஹும் சமட் பலரின் வாழ்வின் ஒளியேற்றலுக்கு விளக்காகவும். வாழ்ந்தவர். தனக்காக தன் வாழ்நாட்களைச் செலவழிக்காது மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் பணிக்காக இரவென்றும் பகலென்றும் நேர காலங்களைச் செலவு செய்தவர் மர்ஹும் சமட்.

இலக்கிய ரசணையும் மொழிப் புலமைமையும் கொண்டு வாழ்ந்த மர்ஹும் சமட் தனக்குள் உள்ள ஆற்றல்களையும் திறமைகளையும் விளப்பரப்படுத்த விரும்பாத ஒருவராகவே இருந்தார். எதை எங்கே எப்போது பயன்படுத்த வேண்டுமோ அதை அச்சந்தர்ப்பகளுக்காக மாத்திரம் பயன்படுத்துவராகவே திகழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தவர் இன்று மண்ணiறை தனது சொந்த அறையாக ஆக்கிக்கொண்டார்

ஆம் அவர் இறையடியெய்திவிட்டார். தவறுக்கும் மறதிக்கும் மத்தியியிலேயே மனிதனை இறைவன் படைத்துள்ளான். அவரும் மனிதன் என்ற வகையில் தவறுகள் அவர் புறத்திலுமிருந்து நிகழ்ந்திருக்கலாம். ஆனால் தவறுகள் பேசப்படாது மன்னிக்கப்படுவதோடு அவர் குறித்த நல்லவைகளை நமது நாவுகள் உச்சரிக்க வேண்டும்.

மக்கள் பணிக்காக மக்கள் பிரதிநிதிகளோடு இணைந்து தனது வாழ்நாட்ளை அர்பணித்து மண்ணறையைச் சென்றடைந்துள்ள மனங்களை வென்ற வெள்ளை மனம் கொண்ட அன்னாரின் மறுவுலக வாழ்வை அருள்புரிந்ததாக ஆக்கிவிடுவாயாக இறைவா!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :