பழுலுல்லாஹ் பர்ஹான்-
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள இரண்டு மாடிக் வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 10-10-2014 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலத்தின் அதிபர் எஸ்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக சவூதி அரேபிய நாட்டின் அரச பிரதிநிதி யஹ்யா பின் அப்துல்லாஹ் அஸஸூஹைரீ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , சவூதி அரேபிய நாட்டின் அரச பிரதிநிதி யஹ்யா பின் அப்துல்லாஹ் அஸஸூஹைரீ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மற்றும் அதிதிகளினால் அஷ்-ஷூஹதா வித்தியாலத்தின இரண்டு மாடிக் வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி),மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீர், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் ,காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுறுதீன் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்.
இங்கு அடிக்கல் நடப்பட்ட பாடசாலை கட்டிடத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 25 இலட்சம் ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment