2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இன்று பகல்1.30

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் 10வது வரவு செலவுத்திட்டம் இதுவாகும்.

சகல தரப்பினரதும் யோசனைகள், கருத்துக்கள் என்பவற்றின் அடிப்படையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அபிவிருத்தி சார்ந்த மக்கள் நல வரவு செலவுத் திட்டமாக இது அமையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தேவையான ஊக்குவிப்புகள், ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்தல் என்பன குறித்தும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வருமானம் அதிகரிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாராகியுள்ளதாகவும், வரவு செலவுத்திட்டத்தில் மீன்பிடி, போக்குவரத்து, பெருந்தோட்ட கைத்தொழில், விவசாயம், சுற்றுலா, சிறு, மத்திய உற்பத்தித்துறைகள் தனியார் துறை, சேவை துறை, நிர்மாணத்துறை, வங்கி, நிதி, தொடர்பாடல், கப்பற்துறை சமூக சேவை உட்பட அநேக துறைகளின் மேம்பாட்டிற்கு யோசனைகள் முன்வைக்கப்பட இருப்பதாகவும் நிதியமைச்சின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாளை சனிக்கிழமை முதல் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் ஆரம்பமாகிறது. நவம்பர் ஒன்று வரை முதலாம் வாசிப்பு மீதான விவாதமும் நவம்பர் 1 முதல் 22 வரை குழுநிலை விவாதமும் இடம்பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :