ராத்தூக்கம் பாதியில தொலச்சி
கடல்வாய் அடஞ்சி
தோணி ஏறி கையால் வலிச்சி
அலைகடல் தாண்டி மீன்கொதி பாத்து
நீர்ப்பஞ்சாய் மிதப்போம்...!
வலைய வளைஞ்சி மோரி ஏறி
இழுக்கச் சொல்லி கூச்சல் போட்டு
தண்டயல் கையாட்ட...
பெரிய மீன்பாடு பொலிப்பாப் படுமென
கால்கள் பொசுங்க சுடுமணல் மிதிச்சி
வலைக்கால் சாஞ்சி வரிசையா இழுப்போம்...!
அம்பா சொல்லி தெம்பா நடந்து
வம்பா வயோதிபம் கிட்டி
சௌப்பு வராம சந்தோசமா சண்டை பிடிச்சி
தலை தெறிக்கும் வெயில்ல
சும்மா கம்பா இயங்குவோம்...!
தண்டயல் கத்தி மீன்பாட்டக் காட்டி
வலைக்காலுக்கு வாங்கடா - என
தூசனத்தால் ஏச
கரையில இருந்து மின்னலாய் குதித்து
உசிர கையில புடிச்சி கடலுக்குள் நீஞ்சி
மீன வளைக்க வலைக்கால் அடிப்போம்...!
வீங்கிய மடி கரைவந்து தட்ட
அத்தனை மீனையும் அள்ளி
தரையில கொட்டி
வந்த வியாபாரிக்கு
விலகூறி விப்போம்...!
உச்சி வெயில் தலையத்தீக்க
கண்கள் இருட்டி
பசிபோக்கும் வெறியில்
கையில் கறியாக்க மீனோட
வீடு விரைவோம்...!
காச்சுண்டும் அரிசின்றி
உலை ஏத்த வழியின்றி
அதுவாங்க காசுமத்து
வீட்டு வாசல் வெறச்சி
இருள் சூழ்ந்து இடரும்...!
இன்டைய மீன்காச அந்திக்குத்தான் புறிப்போம்
நாளைக்குச் சோறாக்க
அரிசிவாங்க காசிருக்கும் - ஆனா
கறியாக்க கடல் மீன்தராது
கறிச்சட்டி கௌட்டு கஞ்சுதான் காச்சனும்...!
சோறும் கறியும் சகவாசம் கொண்டு
எங்க வீட்டுல சுகவாசம் கொள்வது
கரடிகாணும் பொறயாத்தான்
காலமெல்லாம் கடக்குது....!
கரவல மீன்கறி ருசிபோல
துளிகூட குஷியில்ல
எங்க வாழ்வோட.................!!!!???
சொற்களின் விளக்கம்
-----------------------------------
வலிச்சி - தோணியின் துடுப்பினால் தோணியை நகர்த்தும் செயற்பாடு
மீன்கொதி - மீன்கள் கூட்டமாக வரும் காட்சி
வழைஞ்சி - கடலின் ஒருபகுதியை கயிற்று வலையினால் வளைத்தல்
மோரி - தோணியின் முனைப்பகுதி
தண்டயல் - தோணியில் தலைமை வகிப்பவர்
வலைக்கால் - கடலுக்குள் இருந்து கரையில் இழுக்கம் கயிற்று வலை
மடி - வலையால் செய்யப்பட்ட பெரிய பை இறுதியாக
இதற்குள்தான் மீன்கள் சேர்க்கப்பட்டு பிடிக்கப்படும்
அம்பா - வலை இழுக்கும் போது பாடும் நாட்டார் பாடல்
கிட்டி - வம்புக்கிளுத்தல்
சௌப்பு - களைப்பு
கம்பா - கம்புபோல் உறுதி
தூசனம் - மரியாதையற்ற வார்த்தை
வாசற்கட - வீட்டின் முற்றம்
புறிப்போம் - பங்கிடுவோம்
கடல்வாய் அடஞ்சி
தோணி ஏறி கையால் வலிச்சி
அலைகடல் தாண்டி மீன்கொதி பாத்து
நீர்ப்பஞ்சாய் மிதப்போம்...!
வலைய வளைஞ்சி மோரி ஏறி
இழுக்கச் சொல்லி கூச்சல் போட்டு
தண்டயல் கையாட்ட...
பெரிய மீன்பாடு பொலிப்பாப் படுமென
கால்கள் பொசுங்க சுடுமணல் மிதிச்சி
வலைக்கால் சாஞ்சி வரிசையா இழுப்போம்...!
அம்பா சொல்லி தெம்பா நடந்து
வம்பா வயோதிபம் கிட்டி
சௌப்பு வராம சந்தோசமா சண்டை பிடிச்சி
தலை தெறிக்கும் வெயில்ல
சும்மா கம்பா இயங்குவோம்...!
தண்டயல் கத்தி மீன்பாட்டக் காட்டி
வலைக்காலுக்கு வாங்கடா - என
தூசனத்தால் ஏச
கரையில இருந்து மின்னலாய் குதித்து
உசிர கையில புடிச்சி கடலுக்குள் நீஞ்சி
மீன வளைக்க வலைக்கால் அடிப்போம்...!
வீங்கிய மடி கரைவந்து தட்ட
அத்தனை மீனையும் அள்ளி
தரையில கொட்டி
வந்த வியாபாரிக்கு
விலகூறி விப்போம்...!
உச்சி வெயில் தலையத்தீக்க
கண்கள் இருட்டி
பசிபோக்கும் வெறியில்
கையில் கறியாக்க மீனோட
வீடு விரைவோம்...!
காச்சுண்டும் அரிசின்றி
உலை ஏத்த வழியின்றி
அதுவாங்க காசுமத்து
வீட்டு வாசல் வெறச்சி
இருள் சூழ்ந்து இடரும்...!
இன்டைய மீன்காச அந்திக்குத்தான் புறிப்போம்
நாளைக்குச் சோறாக்க
அரிசிவாங்க காசிருக்கும் - ஆனா
கறியாக்க கடல் மீன்தராது
கறிச்சட்டி கௌட்டு கஞ்சுதான் காச்சனும்...!
சோறும் கறியும் சகவாசம் கொண்டு
எங்க வீட்டுல சுகவாசம் கொள்வது
கரடிகாணும் பொறயாத்தான்
காலமெல்லாம் கடக்குது....!
கரவல மீன்கறி ருசிபோல
துளிகூட குஷியில்ல
எங்க வாழ்வோட.................!!!!???
சொற்களின் விளக்கம்
-----------------------------------
வலிச்சி - தோணியின் துடுப்பினால் தோணியை நகர்த்தும் செயற்பாடு
மீன்கொதி - மீன்கள் கூட்டமாக வரும் காட்சி
வழைஞ்சி - கடலின் ஒருபகுதியை கயிற்று வலையினால் வளைத்தல்
மோரி - தோணியின் முனைப்பகுதி
தண்டயல் - தோணியில் தலைமை வகிப்பவர்
வலைக்கால் - கடலுக்குள் இருந்து கரையில் இழுக்கம் கயிற்று வலை
மடி - வலையால் செய்யப்பட்ட பெரிய பை இறுதியாக
இதற்குள்தான் மீன்கள் சேர்க்கப்பட்டு பிடிக்கப்படும்
அம்பா - வலை இழுக்கும் போது பாடும் நாட்டார் பாடல்
கிட்டி - வம்புக்கிளுத்தல்
சௌப்பு - களைப்பு
கம்பா - கம்புபோல் உறுதி
தூசனம் - மரியாதையற்ற வார்த்தை
வாசற்கட - வீட்டின் முற்றம்
புறிப்போம் - பங்கிடுவோம்

0 comments :
Post a Comment