ISISஇஸ்லாமிய தேசமொன்றை உருவாக்கும் தனது அறிவிப்பிற்கு பின்னர்:தென்னாசியாவிலும் கால் பதிக்கின்றது

2014 கோடைகாலத்தில் தன்னுடைய நடவடிக்கைகளால் பிரபல்யமானதை தொடர்ந்து ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பு உலகின் ஏனைய பகுதிகளிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்லாமிய தேசமொன்றை உருவாக்கும் தனது அறிவிப்பிற்கு பின்னர் அது தென்னாசியாவிலும் கால் பதிக்க முயல்கிறது. ஆப்கானிஸ்தானின் டரி மற்றும்பஸ்டோ பகுதிகளிலும் ஐ.எஸ்ஐ.எஸ் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பெசாவரிலும் ஆப்கான் அகதிமுகாம்களிலும் குறிப்பிட்ட அமைப்பு கயவறய (பட்வா) என்றை நூலொன்றை விநியோகித்ததாக பாக்கிஸ்தான் ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

ஐ.எஸ்ஐ.எஸ் உள்ளுர்  சில தீவிரவாத அமைப்புகள் சிலவற்றுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. தலிபானுடன் இணைந்து செயற்பட்ட ஆப்கானிஸ்தானின் ஆயுத குழுவான Hezb-e-Islami இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஐ.எஸ்ஐ.எஸ் உடன் சேர்ந்து செயற்படவுள்ளதாக பிபிசி செய்திவெளியிட்டது. இந்த செய்தியை பின்னர் அந்த அமைப்பு மறுத்துள்ளது.

தென்னாசியாவில் ஏற்கனவே சில அமைப்புகள் ஐ.எஸ்ஐ.எஸிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளதும் முக்கியமானது. பாக்கிஸ்தானை சேர்ந்த Tehreek-e-Khilafat, இந்த வருட கோடையில் ஏற்கனவே தனது ஆதரவை வெளியிட்டிருந்தது.


இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகின்ற போதிலும் பாக்கிஸ்தானிலும், ஆப்கானிலும் தற்போதுள்ள அமைப்புகளை மீறி புதிய அமைப்பொன்று தலைதூக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி?

தென்னாசியாவில் உள்ள பிரதான தீவிரவாத அமைப்புகள் பல விடயங்களை இழக்கவேண்டிவரும் என்பது முக்கியமானது.இவ்வாறான ஓரு முடிவையெடுத்தால் அவை தமதுஆதரவையும் நிதி வளத்தையும் இழக்கவேண்டி வரலாம்.

தென்னாசியாவின் பல சுனி அமைப்புகளுக்கான –அல்கைடா விளங்குகின்றது.அதன் முக்கியத்துவம் தென்னாசியாவில் நீடிக்கும்வரை ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பினால் தென்னாசியாவில் ஆழமாக காலூன்றுவது கடினம்.

இந்த கருத்தை நிராகரிப்பவர்கள் யேமனிலுள்ள அல்கைடா ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பிற்க்கு ஆதரவு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டலாம்.யேமன் அல்கைடாவே –அல்கைடா அமைப்புகளில் மிகப்பெரியது,மிகவும் ஆபத்தானது- அமெரிக்காவின் நலன்கள் மற்றும் இலக்குகளை அதிகளவு குறிவைப்பதும் இந்த அமைப்பே.

இவ்வாறான பலம் வாய்ந்த அமைப்பொன்று அல்கைடாவிலிருந்து பிரிந்து ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது- அதன் செல்வாக்கும்-கவர்ச்சியும் அதிகரித்துள்ளதையும் அதற்கு ஆதரவளிப்பது பெறுமதியான விடயமென கருதுவதையும் புலப்படுத்துகிறது.


ஐ.எஸ்ஐ.எஸ் ஈராக்கை வெற்றிகரமாக தனது பிடியின் கீழ் வைத்திருப்பதால் அயல்நாடுகளிலிருந்து செயற்படும் குழுக்களுக்கு அதன் மீதான பிடிப்பு அதிகமாகி வருகின்றது.இதனை அல்கைடாவால் செய்ய சாதிக்கமுடியவில்லை.

உலக இஸ்லாமிய அமைப்புகளின் தலைமையிலிருந்து அல்கைடாவை ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பினால் அகற்ற முடியுமா என்பதை பொறுத்தே தென்னாசியாவின் தலைவிதி தங்கியுள்ளது.அல்கைடாவை முன்னிலையிலிருந்து அகற்றிவிட்டு அந்த தலைமையை கைப்பற்றுவது என்பது வெளிப்படையான முக்கியமான இலக்கு.

இதில் இன்னொரு முக்கியமான விடயமும் சுட்டிக்காட்டப்படுகின்றது- உலக ஜிகாத் தலைமை என வரும்போது அல்கைடாவை விட அதிகளவு மதிக்கப்படுபவர் ஆப்கானின் தலிபானின் தலைவர் முல்லா ஓமர். இவரிற்கான ஆதரவை சமீபத்தில்தான் அல்கைடா வெளியிட்டிருந்தது. எனினும் அல்ஹைடாவின் செயற்பாடுகளில் பெருமளவிற்கு முல்லா ஓமர் தலையிடுவதில்லை.

புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்காகவும்- தன்னை விஸ்தரித்துக் கொள்வதற்காகவும் தென்னாசியா நோக்கி தனது கவனத்தை திருப்பியிருப்பது நிஜம். எனினும் இந்த பகுதியிலிருந்து செயற்படும் முக்கிய அமைப்புகளின் ஆதரவை பொறுத்தே அதன் நோக்கம் நிறைவேறும். தற்போதைக்கு இந்த அமைப்புகளுக்கு ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பை ஆதரிக்க வேண்டிய காரணங்கள் எதுவுமில்லை.

எனினும் பிராந்திய அரசுகள் சிறு குழுக்கள் குறித்தே கவனம் செலுத்தவேண்டும்-இவை ஐ.எஸ்ஐ.எஸ் உடன் இணைய கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. மேலும் ஜிகாத் தலைமையை கைப்பற்றுவதற்கான போட்டியை கருத்தில் கொள்ளும்போது தென்னாசியா சிறுசிறுமோதல்களை சந்திக்கலாம்.
நன்றி;-குளேபல் செய்தி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :