வட மாவட்டத்திற்கு அபிவித்திற்கு உதவுவதாக அமெரிக்க துணைத் தூதுவர் உறுதி -சி.வி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வழங்கக்கூடிய உதவிகள்தொடர்பாக நாம் நேற்று அமெரிக்க துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஆங்கிலப் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்கான உதவிகள் உள்ளிட்ட வேறு பல உதவிகளை எமக்குச் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் அன்டறூமான் உள்ளிட்ட குழுவினர் நண்பகல் யாழ்.டில்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அமெரிக்க மக்களின் நிதி உதவியுடன் இங்கு மேற்கொள்ளப்பட்ட பல செயற்றிட்டங்களின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை ஆரம்பித்துவைக்கும் நோக்கில் அமெரிக்க துணைத் தூதுவர் அன்டறூ மான் தலைமையிலான குழுவினர் இன்று (நேற்று) குடாநாட்டிற்கு விஜயம் செய்திருந்தனர். இந்தக் குழுவினருடன் அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்ற மூன்று இடங்களுக்கு நானும் சென்றிருந்தேன். மேலும் மதிய உணவின்போது எமது தேவைகள் தொடர்பிலும் எமது மக்களுக்கு வழங்கக் கூடிய உதவிகள் தொடர்பிலும் அவருடன் கலந்துரையாடியுள்ளோம்.

வடமாகாண அமைச்சர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு தத்தமது அமைச்சுக்குத் தேவையான விடயங்கள் தொடர்பாக குறித்த தூதுவருடன் கலந்துரையாடினர்.

இச் சந்திப்பில் எமது பிரதேசத்தில் ஆங்கில அறிவு குறைவாக இருக்கின்றது எனச் சுட்டிக்காட்டிய குறித்த குழுவினர் தற்கால தேவைக்கேற்ப அதனை விருத்தி செய்வது உசிதமாகக் கருதி தாங்கள் முதலில் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஆங்கில பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்வதற்காக உதவுவதாக உறுதியளித்திருந்தனர். மேலும் இங்கு மேற்கொள்ளக்கூடிய பல உதவிகளையும் அடையாளம் கண்டு சென்றுள்ளனர் என்றார்.

இச் சந்திப்பில் வடமாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோருடன் இந்த அமைச்சுக்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்க பிரதிநிதிகள் தரப்பில் அந்த நாட்டின் இலங்கைக்கான பிரதி தூதுவர், அமெரிக்கத் தூதரகத்தின் செயலாளர், அமெரிக்க மக்களின் நிதிப் பங்களிப்புடன் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இணைப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் நிறைவில் வடக்கு மாகாண விவசாய மற்றும் கால் நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசனினால் இம் மாகாண மக்களின் தேவைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க அரசாங்கத்தின் உதவியுடன் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டுள்ளதுடன் செய்து முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு மக்களின் குறைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :