இரண்டு பிள்ளைகளின் தாயான இவருக்கு, கொழும்பு மேற்குப் பிராந்திய சிறு நீரகம் தொடர்பான வைத்திய சாலையின் விசேட வைத்திய நிபுணரும், பணிப்பாளருமான பேராசிரியர் றிஸ்வி ஷெரீப், மிக அவசரமாக சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இவரது சத்திர சிகிச்சைக்காக , சுமார் இருபது இலட்சம் ரூபா வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இவரது ஏனைய இதர செலவுகளுக்காக மேலும் பல இலட்சம் ரூபா அளவில் தேவைப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாடம் சிறு தொழில் செய்து, தன் குடும்பத்தைப் பராமரித்து வரும் இவரது கணவருக்கு, மேற்படி தொகையைத் திரட்டிக் கொள்வது முடியாதுள்ளதால், உயிருக்காகப் போராடிவரும் இவரது உயிரைக் காப்பாற்ற, பரோபகாரிகளிடமிருந்து குடும்பத்தார் நன்கொடைகளை எதிர்பார்க்கின்றனர்.
கருணை உள்ளம் கொண்டோர், ஐ.ஏ.காதர் – இலங்கை வங்கி-லேக்ஹவுஸ் கிளை -3275831, கொமர்ஷல் வங்கி -நகர காரியாலயம்- 8020042523 , மக்கள் வங்கி – தலைமைக் காரியாலயம்- 204200140094973, அமானா வங்கி – புறக்கோட்டை கிளை – 0100204720001 ஆகிய வங்கிகளின் கணக்கிலக்கங்களுக்கு, தமது நன்கொடைகளை வைப்பில் இடுமாறு குடும்பத்தார் வேண்டுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு,
ஐ.ஏ.காதர்- 071- 22 99 801, 072- 22 99 801
ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு: சித்தி றிஸ்மினா என்பவர் – சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ. ஏ. காதிர் கான் (மௌலவி) அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment