பொத்துவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகள் மக்கள் பாவனைக்காக



சலீம் றமீஸ்-

ஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் தீர்க்கதரிசனமான அபிவிருத்தி வழிகாட்டலில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினாலும் பொத்துவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளருமான ஏ.பதுர்கான் தலைமையில் இடம் பெற்ற வீதிகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பொத்துவில் கடற்கரை கொங்கிறீட் வீதி, மத்திய கல்லூரி கொங்கிறீட் வீதி, பி.எம்.காதர் வீதியும், வடிச்சல் திட்டம் போன்ற அபிவிருத்திகளே அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி.வி.கருணநாதன் , நீர்ப்பாசன மாகாணப் பணிப்பாளர் எந்திரி. எஸ்.திலகராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாண பணிப்பாளர் எந்திரி.ஏ.எல்.எம்.நிசார், மாகாண பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் எந்திரி. யு.எல்.எம்.நஸார், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை பிரதம பொறியியலாளர் எந்திரி எஸ்.மஹிந்தன், மத்திய நீர்ப்பாசன அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எந்திரி கே.டி. நிஹால் சிறிவர்த்தன, வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளர் எந்திரி.ஐ.எல்.ஏ.பாரி, அம்பாரை பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் (மாகாணம்) பி.ரி.ஏ.ஜெயகுமார், நீர்ப்பாசன பொறியியலாளர் (மத்திய) டபிள்யு.யு.கே.சிரிவர்த்தன, கோமாரி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் சிறிசாந்த, அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரனி எம்.எம்.பஹிஜ், எஸ்.எம்.சபீஸ், யு.எல்.உவைஸ், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ,றாசீக் உட்பட மத்திய, மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் உயரதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :