கூட்டு அர­சாங்கம் ஒன்று அமை­வது மூவின மக்­களின் உரி­மை­க­ளையும் பாது­காக்கும்-மங்­கள சம­ர­வீர

னப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் அர­சாங்கம் உட­னடித் தீர்­வினை எட்­டு­வதா? அல்­லது சர்­வ­தே­சத்­திடம் மண்­டி­யி­டு­வதா? என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­யத்­தினை முரண்­பா­டாக எடுத்­துக்­கொள்­வது அர­சாங்­கத்­திற்கே பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என தெரி­விக்கும் ஐ.தே.க. எம்.பி. மங்­கள சம­ர­வீர, கூட்டு அர­சாங்கம் ஒன்று அமை­வது மூவின மக்­களின் உரி­மை­க­ளையும் பாது­காக்கும் எனவும் தெரி­வித்தார்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் இந்­திய விஜயம் தொடர்பில் அர­சாங்கம் விமர்­சித்து வரு­கின்ற நிலையில் அது தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சி­யிடம் வின­விய போதே ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு கடந்த காலங்­களில் ஏற்­பட்­டி­ருக்­கு­மாயின் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரோ, தமிழ் மக்­களோ சர்­வ­தேச தலை­யீ­டொன்­றினை விரும்­பி­யி­ருக்க மாட்­டார்கள். உண்­மை­யி­லேயே இலங்­கையில் தேசிய விட­யங்­களில் சர்­வ­தே­சத்தின் தலை­யீடு இருக்­கக்­கூ­டாது என்­பதை நாமும் விரும்­பு­கிறோம். எனினும் அர­சாங்கம் தீர்­வினை விரும்­ப­வில்லை. அர­சாங்கம் இணக்­கப்­பாட்­டினை விரும்­பாத சந்­தர்­ப்பத்தில் சிறு­பான்மை மக்கள் தமக்­கான தீர்­வினை வேறு ஒரு வழி­முறை­யி­னூ­டா­கவே பெற­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. எனவே, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சர்­வ­தேச நாடு­களை நாடு­வதில் அர­சாங்கம் குற்றம் சுமத்த முடி­யாது.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் அர­சாங்கம் உட­னடித் தீர்­வொன்றை மேற்­கொள்ள வேண்­டிய தேவை உள்­ளது. யுத்தம் நிறை­விற்கு கொண்­டு­வ­ரப்­பட்டு 5 ஆண்­டுகள் கடந்தும் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு தொடர்பில் அர­சாங்கம் சிந்­திக்­காது செயற்­ப­டு­வது நாட்டின் ஒற்­று­மையில் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­து­வ­தோடு சர்­வ­தே­சத்தின் தலை­யீட்­டி­னையும் வலுப்­ப­டுத்தும். எனவே, இனப் பிரச்­சினை விட­யத்தில் உட­ன­டி­யாகத் தீர்வு காண்­பதா? அல்­லது நாட்டில் இனப்­பி­ரச்­சி­னை­களை வளர்த்து சர்­வ­தேச அழுத்­தத்­திற்கு முகம் கொடுத்து இறு­தியில் சர்­வ­தே­சத்­தி­டமே மண்­டி­யி­டு­வதா? என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்க வேண்டும். சர்­வ­தேச பிடியில் இருந்து அர­சாங்கம் தப்ப வேண்­டு­மாயின் இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வது அவ­சி­ய­மாகும்.

மேலும், நாட்டின் ஒற்­று­மையினை நிலை­நாட்ட வேண்­டு­மாயின் இந்த ஆட்­சி­யினை மாற்றி அமைக்கவேண்டும். இனத்துவேசத்தினை தூண்டி நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தும் அரசாங்கத் தினை விரட்டியடித்து அனைத்து தரப்பின ரையும் மக்களையும் ஒன்றிணைத்து கூட்டாட்சி முறைமையொன்றினை உரு­வாக்குவதன் மூலமாகவே நாட்டில் அமைதி­யினை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :