"திவிநெகும சஹன அருண” விஷேட கடன் வழங்கும் நிகழ்வு -படங்கள்

ஹாசிப் யாஸீன்-

ஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைவாக திவிநெகும பயனாளிகளுக்கு “திவிநெகும சஹன அருண” விஷேட கடன் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்;.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கடன் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், திவிநெகும தலைமைக்காரியாலய முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான், திட்ட முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், உதவி முகாமையாளர்களான ஏ.எம்.எம்.றியாத், முபாறக், எம்.யூ.ஹில்மி உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், திவிநெகும பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருதில் தெரிவு செய்யப்பட்ட 34 திவிநெகும பயனாளிகளுக்கு தலா ரூபா 50 ஆயிரம் படி ரூபா 17 இலட்சம் வழங்கி வைக்கப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :