ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அபிவிருத்திப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு

றாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அபிவிருத்திப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ரூபா 39.58 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 94 அபிவிருத்திதிட்டங்களை ஆரம்பித்துவைக்கும் முகமாக ஏறாவூர் 6 கிராம சேவகர் பிரிவில் கிராமத்தினை வலுப்படுத்தும் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் முகைதீன் கிளாக்கர் வீதிக்கான கொங்கிறீட் இடல் வேலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வு இன்று 01.09.2014ம் திகதி காலை 9.30 மணியளவில் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ளுடு. முஹமத் ஹனிபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

 இவ்வங்குரார்ப்பண நிகழ்வில்; கௌரவ அதிதியாக பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான கௌரவ பஸீர் சேகுதாவூத் அவர்களும் ஏறாவூர் நகர சபையின் உதவி தவிசாளர் ஆஐஆ. தஸ்லீம், நகர சபையின் உறுப்பினர் துஆ. முஸ்தபா, பிரதி திட்டமில் பணிப்பாளர் ளு. சிவலிங்கம், கணக்காளர் ளுர். நௌபீக், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் ஆர்ஆ. ஹமீம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :