புல்மோட்டை நிகழ்வு நிறுத்தம்- கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக பொலிசில் புகார்

ன்று காலை திருக்கோணமலை புல்மோட்டை ஆதார வைத்திய சாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு மாடி நோயாளர் விடுதிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற இருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர். புல்மோட்டை பிரதேச சபையின் தவிசாளர் என பலரும் கலந்து கொள்ள இருந்தார்.

ஆனால் இந்த நிகழ்வினை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அன்வர் வைத்தியசாலைக்குள் நுளைந்து வைத்திய அத்தியேட்சகரை அச்சுறுத்தி இந்நிகழ்வினை நிறுத்தவேண்டும் என்று கூறியதனால் இந்த நிகழ்வு தடை செய்யப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் புல்மோட்டை பொலிசில்  தான் அச்சத்துடன் இருப்பதாகவும்தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் முறைப்பாடு செய்துள்ளதாகவும்இம்போட்மிரருக்கு தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சில இணையத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன, அமைச்சர் மன்சூர் இந்நிகழ்வினைக்குழப்பினார் என்ற செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் வைத்திய அத்தியேட்சகரின்  செவ்வியில் இம்போட்மிரருக்கு  தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :