பாராளுமன்ற உறுப்பினர், மாகாண அமைச்சர், நகரபிதா கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவுக்கு வருகை





ரைஸ்-

ற்போது கிண்ணியாவினை அகில இலங்கைக்கே அழகாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் ஒன்றாக கிண்ணியா பொழுதுபோக்கு பூங்கா விளங்குகிறது. இப்பூங்காவினை பார்வையிடவென நாட்டின் பல பாகங்களிலிந்து பல்லின மக்களும் வருகை தந்தவண்ணமுள்ளனர்.

கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் இப்பூங்கா தற்போது அனைவரின் வரவேட்பையும் பாராட்டையும் பெற்று மிளிர்வதோடு இங்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.

இப்பூங்காவினை பார்வையிட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி உட்பட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் கல்வி தகவல் தொழிநுட்ப அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டனர். இப்பூங்கா மற்றும் மரக்கறி சந்தைக்கட்டிட தொகுதி, ரஹ்மானியா சிறுவர் பூங்கா, கடற்கரை வீதி ஆகியவற்றை வருகை தந்தோர் பார்வையிட்டதோடு நகரசபையினூடாக செய்யப்பட்ட குறித்த வேலைத்திட்டங்கள் பாராட்டுக்குறியதும் பிரயோசனமானதுமாக இருப்பதாக நகரபிதாவிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இங்கு நகரபிதா குறிப்பிடும் போது கடந்த வாரம் இப்பூங்காவினை பார்வையிட வருகை தந்திருந்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இப்பூங்காவின் பக்கமாக காணப்படக்கூடிய பாலத்தினை புனரமைத்து தருவதற்கான செலவு விபரத்திற்கான மதிப்பீடுகளை தனக்கு வழங்குமாறும் அதற்கான உதவிகளை வழங்குவதாகவும் அமைச்சர் நகரபிதா ஹில்மியிடம் தெரிவித்ததாகவும் அதற்கான மதிப்பீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நகரபிதா மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :