கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவானது.




எஸ்.அஷ்ரப்கான் -

ல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த “ யங் பேட்ஸ் கிண்ணம்-2014 ” கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளின் இறுதிப்போட்டியில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவானது.

இவ்விறுதிப்போட்டி நேற்று (06) சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் மோதிய இந்த இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ஜிம்கானா விளையாட்டுக்கழகம் களத்தடுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 113 ஓட்டங்களை பெற்றது.

இலகுவான வெற்றி இலக்கை எதிர்கொள்ள பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்கானா விளையாட்டுக்கழகம் போட்டியின் நடுப்பகுதியில் எதிரணியின் பந்துவீச்சுக்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் சற்று தடுமாறி தொடராக விக்கெட்டுக்களை இழந்து வந்தாலும், போட்டியின் இறுதி நேரம் வரை மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி ஓவரின் 2 பந்துகளுக்கு 2 ஓட்டங்கள் என்ற இலக்கில் கல்முனை யங் பேட்ஸ் அணியினர் வெற்றி இலக்கை அடைந்தனர்.

இந்த இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கான வெற்றிக்கேடயம், பணப்பரிசு என்பவற்றை வழங்கிவைத்தார். இச்சுற்றுப்போட்டியில் 2ஆம் நிலைக்கு வந்த சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தினருக்கான கேடயம் மற்றும் சிறப்பு, தொடர் ஆட்டக்காரர்களுக்கான பரிசில்களும் கிண்ணமும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விளையாட்டு நிகழ்வில் கௌரவ அதிதியாக முன்னாள் கல்விக் கல்லுாரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா அவர்களும், விசேட அதிதிகளாக கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஸலாம்,செயலாளர் எஸ்.எல்.எம். ஜாபீர், கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் பிரதித் தலைவர் எம்.எம். மர்சூக், ஆயுட்காலச் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் மற்றும் கவிஜரும், அறிவிப்பாளருமான எம். ஸாஹீர் கரீம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :