கிண்ணியா பிரதேசத்தில் தள வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியில் வைத்திய விசேட நிபுணர்களுக்கான விடுதிகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வொன்று நேற்று மாலை இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.முகம்மட் மன்சூர் இதற்கென 18 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார்.
கிண்ணியா தளவைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச். சமீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.லாகீர், கிண்ணியா நகர சபையின் தவிசாளர் டொக்டர் எம்.ஹில்மி மஹ்ரூப் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணுகரன் பிராந்திய உதவித் தவிசாளர்கள் வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது திருகோணமலை மாவட்ட காரியலாயம் ஒன்று அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது
.jpg)
.jpg)

.jpg)
0 comments :
Post a Comment