வடமாகாணத்திற்கு அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற தாதிகள் ஒன்று கூடல்-படங்கள்







ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

டமாகாணத்திற்கு அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற தாதிகள் மற்றும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் கடமையற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் தாதிகள் ஆகியோர்களுடனான வெவ்வேறு சந்திப்புக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை(01) பிற்பகல் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்து கொண்டு வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 92 தாதிகள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் 46 தாதிமார்களை சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் வடமாகாணத்திலுள்ள மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கடமையாற்றவுள்ளனர். குறிப்பாக தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கும் இவர்களில் சிலர் நியமிக்கப்படவுள்ளனர்.

 இந்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன், வடமாகாண சுகாதார பணிப்பாளர் திருமதி ஜூட் உட்பட பலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :