த.நவோஜ்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 'சஹன அருன' கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செலாளர் எம்.எம்.நௌபர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு சஹன அருன திட்டத்தில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு பணத்தினை வழங்கி வைத்தார்.
இதில் பிரதேச செயலக அதிகாரிகளும், வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நாற்பத்தி மூன்று பயனாளிகளுக்கு பதினைந்து லட்சத்தி அறுபத்தையாயிரம் ரூபா பணம் வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment