அக்கரைப்பற்று. இனங்களுக்கிடையில் அன்பு, மொழி,சமய கலாசார விழுமியங்களைப் பரிமாற்றம் செய்து அவர்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சகோதர சங்கமம் என்ற நான்கு நாள் வதிவிட நிகழ்ச்சி கடந்த (29.08.2014) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எல்.ஸெய்னுதீன் தலைமையில் ஆரம்பமானது. நான்கு நாள் நகழ்வு நேற்று திங்களுடன் நிறைவு பெற்றது.
ஜி.ஐ.இஸற்(புஐணு) நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் உயர் பண்புமிக்க சமுகமொன்றிற்காக நான் என் பங்களிப்பை வழங்குகின்றேன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் என்ற தொனிப் பொருளில் இந் நிகழ்வுஆரம்பமானது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜி.ஐ.இஸற் நிறுவனத்தின் தொழில் நுட்ப ஆலோசகர் எம்.பவளகாந்தன், கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.கியாஸ், ஜி.ஐ.இஸற் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகர் ஏ.நவரட்ணராஜா, வளவாளர் எம்.புவிராஜ், கணக்காளர் எம்.ருவான்,ஆசிரிய ஆலாசகர் திருமதி ஜே.எப்.அனீஸா ஹுஸைன், வளவாளர் எம்.புவிராஜ், பி.கருபாகரன்,உளவளத்துறை ஆலோசகர் ஏ.தாஹிர், ஆகியோர் கலந்து கொண்டதோடு,; அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலயம், தம்பிலுவில் மஹா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயம், அக்கரைப்பற்று பதுர் வித்தியாலயம் முதலிய பாடசாலைகளைச் சேர்ந்த இஸ்லாம், இந்து, பௌத்த மதங்களைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ்,சிங்கள மாணவ, மாணவிகள்;, பாடசாலைஅதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள்,கலந்து கொண்டனர்.
அதிதிகள் மற்றும் மாணவ,மாணவிகள் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய கலாசார முறையில் பொல்லடித்து மற்றும் குரவை ஒலி எழுப்பி வரவேற்று அழைத்து வரப்பட்டார்கள். புhரம்பரிய திண்பண்டங்களுடனான தேனீர் உபசாரமும் வழங்கப்பட்டது. தேசியம் விலை மதிக்க முடியாத சொத்தாகும், மதம் வழிகாட்டும் ஒளி விளக்காகும், இவற்றைப் பேணிப் பாதுகாப்பவனே இந்த உத்தம தாய்நாட்டின் மைந்தனாவான்.என்ற இலக்கை அடையும் நோக்கில் இந்த நான்கு நாட்களும் இவர்கள் ஒருவருடைய சமய, கலாசார பாரம்பரியங்களையும் பழக்க வழக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடியதான பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். அதுமாத்திரமன்றி பாரம்பரிய உணவுகளையே சாப்பிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எல்.ஸெய்னுதீன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.கியாஸ் மற்றும் தனது ஆசிரியர்களுடனும் இணைந்து ஒழுங்குகளைச் சிறப்பாகச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கலை, கலாசார, நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இறுதி நாள் வைபவத்தில் ஜி.ஐ.இஸற் நிறுவனத்தின் தொழில் நுட்ப ஆலோசகர் எம்.பவளகாந்தன், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம்,பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.ஏ.கியாஸ். கோட்டக் கல்விப் பணிப்;பாளர் எம்.ஐ.ஏ.கபூர்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர், , வளவாளர் எம்.புவிராஜ், கணக்காளர் எம்.ருவான்,ஆசிரிய ஆலாசகர் திருமதி ஜே.எப்.அனீஸா ஹுஸைன், வளவாளர் எம்.புவிராஜ், பி.கருபாகரன்,உளவளத்துறை ஆலோசகர் ஏ.தாஹிர், ஆகியோர் கலந்து கொண்டனர்
கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment