பைஷல் இஸ்மாயில்-
பாலமுனை ஐந்தாம் குறிச்சியைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா அப்துல் மனாப் முழு தீவுக்குமான ஓரு சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
நலன்புரி அமைப்பின் தலைவரும், அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகம், தேசிய ஜக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் போன்றவற்றின் உதவிச் செயலாளராகவும், பாலமுனை பிரதேச சமூக சேவைகள் அமைப்பின் அங்கத்தவராகவும் செயற்பட்டுவருகின்றார்.
பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், மாணவ தலைவராகவும் செயற்பட்ட இவர் மர்ஹூம் ஆதம்லெப்பை முஹம்மது ஹனிபா, உதுமாலெப்பை சித்தி பழீலா ஆகியோரின் முதலாவது புதல்வராவார்.
.jpg)
0 comments :
Post a Comment