பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி கோறளைப்பற்று



த.நவோஜ்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 'சஹன அருன' கடன் வழங்கும் வேலைத்;திட்டம் நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைய வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நாற்பத்தொரு பயனாளிகளுக்கு இருபது லட்சத்தி ஐம்பத்தையாயிரம் ரூபா பணம் வாழைச்சேனை கோறளைப்பற்று வாழ்வின் எழுச்சி திணைக்கள வங்கியில் வைத்து வழங்கப்பட்டது.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செலாளர் திருமதி.ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான சஹன அருன திட்டத்தில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு பணத்தினை வழங்கி வைத்தார்.

இதில் வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன், வங்கி முகாமையாளர் கோ.லதா, பிரதேச செயலக அதிகாரிகளும், வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :