ஜெய்க்கா கிராம மக்களினது போக்குவரத்து நன்மை கருதி வீதி அபிவிருத்தி நிகழ்வு

 சலீம் றமீஸ்-

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜெய்க்கா கிராம மக்களினது போக்கு வரத்து 
நன்மை கருதி ஜெய்க்கா கிராமத்திற்கு செல்லும் வீதியும், விவசாயிகளின் நலன் கருதி றொட்ட– மென்தோட விவிசாய வீதியும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.



மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் முயற்சியினால் இவ் வீதி அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும் ஏ.பதுர்கான் தலைமையில் இடம் பெற்றது.

இந்த வைபவத்தில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசண அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்கள் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், பொத்துவில் பிரதேச செயலாளர் 
என்.எம்.எம்.முஸாரத் மற்றும் மத்திய , மாகாண நீர்ப்பாசணம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினது மாகாணப்பணிப்பாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், பிரதேச பொறியியலாளர்கள், முக்கியஸ்தர்களும் விவசாய குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :