கல்முனை முகைதீன் பள்ளிவாசல் விவகாரம்:இடைக்கால தடையுத்தரவினை நீக்குவதற்கு உதவியோருக்கு நன்றிகள்

ஹாசிப் யாஸீன்-

ல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பபட்டு வந்த வாகனத் தரிப்பிடம் மற்றும் சுற்றுமதில் நிர்மாணத்திற்கு நீதிமன்றம் வழங்கி இடைக்கால தடையுத்தரவினை நீக்குவதற்கு பேருதவி வழங்கிய சட்டத்தரணிகள் குழாமிக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவரும் வைத்தியருமான எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 18.08.2014ம் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்ட்டு வந்த வாகனத் தரிப்பிடத்திற்கு எதிராக கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நிர்மாணப்பணிகளை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துமாறு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்திருந்தது.

இவ்வழக்கு நேற்று முந்தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கிக்கு பள்ளிவாசல் சார்பாக மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையிலான சட்டத்தரணி எம்.எச்.எம்.ஹம்சா, சட்டத்தரணி ஐ.எல்.எம்.றமீஸ் மற்றும் கல்முனைக்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.எஸ்.கே.சாரிக் காரியப்பர், ஆரிக்கா சாரிக் காரியப்பர் ஆகியோர் ஆஜராகினர்.

சட்டத்தரணிகள் குழாம் பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வாகனத்தரிப்பிடத்தினதும் சுற்றுமதில் நிர்மாணப்பணியினதும் நியாயங்களையும் அதன் தேவைப்பாடுகளையும் விரிவாக நீதிமன்றில் எடுத்துக் கூறினர்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த மாவட்ட நீதிபதி எம்.பி.எம்.முகைதீன் வாகனத்தரிப்பிடத்திற்கும் சுற்றுமதில் நிர்மாணத்திற்கும் வழங்கப்பட்ட 14 நாட்கள் இடைக்கால தடையுத்தரவினை நீக்குவதாக அறிவித்தார்.

எமது பள்ளிவாசல் வழக்கிக்காக ஆஜராகி நிர்மாணப் பணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவினை நீக்குவதற்கு ஒத்துழைப்பும், உதவியும் செய்த சட்டத்தரணிகள் குழாமிக்கு ஊர்மக்கள் சார்பாகவும், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை சார்பாகவும் மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :