த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டம் - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வடிச்சல் காட்டில் ஒரு தொகுதி ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ- 56 ரக துப்பாக்கி மகஸின்கள் 2, ரீ-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 192, மோட்டோர் குண்டு 1 (61 ரகம்) என்பனவே மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு புலனாய்வுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கரடியனாறு பிரிவுக்குப் பொறுப்பான புலனாய்வுப் பகுதியினரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டு கரடியனாறு பொலிஸில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன.
இந்த ஆயுதங்கள் குறித்து புலனாய்வுப் பொலிஸாரும், கரடியனாறுப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment