ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தில் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று வித்தியாலய வளாகத்தில் இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.ஏ.றகீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாகாண கல்வியமைச்சர் விமல வீர திசாநாயக்க, மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஏ.றசூல், உலக வங்கி ஆலோசகர் எம்.ரி.எம்.சஹீட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.எம்.சஃபீர், யூ.எல்.பஸீர், ஏ.எம்.தபீக் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க இங்கு உரையாற்றுகையில்:-
'கிழக்கு மாகாணத்தில் 04 இலட்சம் மாணவர்களும், 20 ஆயிரம் ஆசிரியர்களும் உள்ளனர். மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைகின்றனர். ஆனால் அவர்களிடத்தில் மனிதாபிமானத்தோடு வாழ்வதற்கான கல்வி இல்லை. உண்மையான கல்வி இருந்தால் அவர்கள் மற்றவர்களைப் பழிதீர்க்கமாட்டார்கள். ஒற்றுமை உணர்வுடன,; சந்தோசமாக நிம்மதியாக வாழ்வார்கள்' எனத் தெரிவித்தார்.
மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உரைநிகழ்த்துகையில்:- 'உலகில் ஒரு மனிதன் பெற்றுள்ள சொத்துக்களில் மிகவும் பெறுமதியான சொத்து கல்விதான். இந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்குவதில் நாமெல்லோரும் பல தியாகங்களைச் செய்ய வேண்டும். இதனை முன்னேடுத்துச் செல்வதற்கு கல்விச் சமூகத்தினர் மாத்திரமின்றி, சகல தரப்பினரும் முன்வர வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment