பொதுபல சேனா தலைமையில் அரச சுகாதாரத் துறைக்கான புதியதொரு தொழிற் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் கிருலப்பனையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் இன்று கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர்;
இலங்கை சிங்கள பௌத்த நாடு ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் இது பல்லினம், பல் மதத்தவர்கள் வாழும் நாடென காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
பிரான்ஸ், ஜேர்மனி, சவூதி அரேபியா என பல நாடுகள் தமது கலாசாரத்திற்கு முதலிடத்தை வழங்குகின்றது. இங்கு தான் மாற்றமாக உள்ளது.
0 comments :
Post a Comment